140
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை எதிர்த்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூலும் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும் நளின் அபயசேகரவும், ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு தொடர்பான அறிக்கையொன்றில் சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் கையெழுத்திட மறுத்திருந்தார். பேராசியா இரட்ண ஜீவன் கூல் குறிப்பிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக பதவி விலக தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love