நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள், பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில், மனுதாரர்களுக்கு அறிவிப்பு விடுப்பதற்காக, விசாரணைகள் பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டு, ஆரம்பிக்கப்பட்டபோது, மனுதாரர்கள் தங்களுடைய பக்க விவாதங்களை, சமர்ப்பிப்புகளை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மனுக்கள் 17, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.