191
கட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது சம்பந்தமாக பிபிசி வினவிய போது பதில் வழங்கிய அவர், அது நடைபெறுவதற்கு ஒரு ஒழுங்கு முறை இருப்பதாகவும், அதன்படி செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான தேர்தலுக்கே ஐக்கிய தேசிய கட்சி அச்சமடையும் என்றும் சட்டரீதியாக இடம்பெறும் எந்த தேர்தலுக்கும் ஐக்கிய தேசிய கட்சி அச்சமடைவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Spread the love