பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்டுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கான சிறப்புக் கூட்டம் ஒன்றிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை 14ஆம் திகதி காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இக் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை நாளைய தினம் பாராளுமன்றம் கூடும் என்றும் தமது பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித ஆகியோர் தெரிவித்துள்ளனர்.