சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி மாதம் 24-ந் திகதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 7 அடி உயரத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. அந்தச் சிலையில் ஜெயலலிதாவின் முகபாவனையில் இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தநிலையில் ஜெயலலிதாவின் சிலையை மாற்றியமைக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த சிலையயை திறந்து வைத்துள்ளனர்.