அமெரிக்காவில் வெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்
அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு வெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்கள் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளாக வெறுப்பினால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்தப்படியே உள்ளதாகவும் கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 7175 வெறுப்பு குற்றங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2016ஆம் ஆண்டில் 6121 எனக் காணப்பட்டதாகவும் 2017 இல் அதிகரித்துள்ளதாகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பினத்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிராகவே இவ்வகை குற்றங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.