பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போது அமைதியற்ற நிலை தோன்றியுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மகிந்த தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென சபாநாயகர் அறிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்றப் பகுதியில் கூடியுள்ள இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றநிலைய தோன்றியுள்ளதெனவும் இதரைனயடுத்து அப்பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்குடன் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது