மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாய்மொழி மூலம் வாக்கெடுப்பின் போது இது உறுதியானது எனவும் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் வாக்களித்ததை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்று வாய்மொழி மூல வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எவராவது எதிர்க்க விரும்பினால் நாளை அவர்கள் அதனை செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தாங்கள் நாளையும் அதனை தோற்கடிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.