ஒரே பார்வையில் MY3 MR அரசாங்க தரப்பின் குமுறல்கள்
“சபாநாயாகர் கரு ஜயசூரிய முட்டாள் தனமான செயலை செய்துள்ளார்.”
சபாநாயாகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றில் முட்டாள் தனமான செயலை செய்துள்ளார் என புதிய அரசாங்கத்தின் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
“உங்களுக்கு பிரேரனையை நிறைவேற்ற முடியாது, பாராளுமன்றை அவமதித்துள்ளீர்கள் நிலையியற் கட்டளைகள் பின்பற்றபட வேண்டும். வாக்கெடுப்பிற்கு அழைப்பதாக இருந்தால் அது இலத்திரனியல் வாக்கெடுப்பாக அமைய வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஒரு சாராரை மாத்திரம் வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் அழைக்க முடியாது.
பாராளுமன்றை கீழ் படுத்தியுள்ளார். அரசியலமைப்பை அவமதித்துள்ளார். சபாநாயகர் முட்டாள்தனமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவே நான் தெரிவிக்கிறேன்.” என கடுமையாக கருத்து தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்ல பிரேரணைக்கு பெரும்பாண்மை கிடைத்து அப்பிரேணை நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேனையை தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல நாளை காலை வரை 10 மணி வரை பாராளுமன்றை ஒத்திவைக்கும் ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
லக்ஷ்மன் கிரியெல்லவின் முன்மொழிவிற்கும் பெரும்பான்மை கிடைத்ததையடுத்தே சபாநாயகர் பாராளுமன்றை நாளை காலை 10 மணி வரை பாராளுமன்றை தற்காலிகமாக ஒத்திவைத்தார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் குணவர்தன பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ஊடகவியாலளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டுமென்பதை மக்கள் முடிவெடுக்கட்டும் – நாமல்
பிரதமர் மஹிந்த மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டுமென்பதை மக்கள் முடிவெடுக்கக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைத் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தலை ஒத்திவைத்த வரலாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளதென்றும், ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் முன் செல்லாத வரலாறும் உண்டு என்றும் தெரிவித்துள்ள நாமல் மக்கள் முடிவெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி உள்ளார்..
அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறுகிறார் திலங்க சுமத்திபால…
தற்போதைய அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லையென, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ள நிலையில், அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இருப்பதாக, முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்று காகிதமொன்றையே சமர்பித்தனர். இது தொடர்பில் விவாதம் நடத்தி, வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அது முறையான செயற்பாடாகுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அரசாங்க அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கவுள்ளது..
அமைச்சரவையின் தீர்மானங்களை தெரிவிப்பதற்கான அமைச்சரவை கலந்துரையாடல் இன்று (14.11.18) பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் அலுவலகத் தகவல் தெரிவித்துள்ளது.