பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஸ சபையை விட்டு வெளியேறினார். பாராளுமன்றம் இன்று கூடிய நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
சபைக்கூடும் முன்பே சபைக்குள் வந்து அமர்ந்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சபை நடவடிக்கைகளை சிரித்தவாறே அவதானித்துக்கொண்டிருந்தார். இடை இடையே ஐக்கிய தேசியக் கட்சியை பார்த்து கைகளையும் காட்டிக்கொண்டிருந்தார். இதன் பின்னர் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும்வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தன் கருத்துகளை முன்வைக்க முற்பட்ட போதும் அதற்கான வாய்ப்பும் ஒலிவாங்கியும் அவருக்கு வழங்கப்படவில்லை.
ஆனால் நிலைமை மோசமடைந்து எதிர்க்கட்சிகளினதும், ஐக்கியதேசிய முன்னணியினரதும் ஆதிகம்கம் மேலோங்கிய நிலையில் அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்குவிடப்பட தயாரானபோது பிரதமரை சக அமைச்சர்களும் உறுப்பினர்களும் சபைக்கு வெளியே அழைத்துச் சென்றுவிட்டனர்.