2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விடுத் துள்ள செய்திக்குறிப்பில் உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த வருடம் மே 30-ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் ஐபிஎல் போட்டி யில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் பங் கேற்க முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது
அதே வேளை நடப்பு உலகக் கிண்ண சம்பியன் என்பதால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பை போட்டிதான் முக்கியம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கருதுவதாகவும் இதனால் உலகக் கிண்ணப் போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 வீரர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.