127
யாழ்.நாவற்குழி பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழில் போதை பொருளை வாங்கிய இவர், பேருந்தில் சென்று நாவற்குழி பகுதியில் இறங்கிய வேளை சாவகச்சேரி காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிபடையில் இந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் நாவற்குழி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் எனவும் , அவரிடம் இருந்து 250 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்டதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love