164
நீண்டகாலமாக குழந்தைபாக்கியத்தை எதிர்பார்த்து இருந்தவர் ஒரே சூழில் மூன்று குழந்தைகளை பெற்ற நிலையில் உயிரிழந்து உள்ளார். சாவகச்சேரி சங்கத்தானை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய இராஜசிறி மாலினி என்பவரே உய்ரிழந்தவராவர்.
குறித்த குடும்ப பெண் திருமணம் ஆகி நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இன்றி இருந்த நிலையில் கடந்த வருடம் இந்தியா சென்று சிகிச்சை பெற்று கருத்தரித்து நாடு திரும்பினார்.
அந்நிலையில் நேற்றைய தினம் பிரசவ வலி ஏற்பட யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
Spread the love