பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ முடியாது!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை பார்க்கும்போது பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற நிலையை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை பார்க்கையில் வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் என நினைப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திற்குள் நேற்றைய தினம் ஏற்பட்ட வன்முறை மற்றும் குழப்ப சூழல் குறித்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு தமிழ் மாநிலம் உருவாகியிருந்தால் தற்போது நாட்டில் நிலவும் அரசியல் குழுப்பங்களுக்கு மத்தியில் அந்த மாநிலம் தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கக்கூடும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழல் பெரும்பான்மையினத்தவருடன் இணைந்து வாழ முடியாது என்ற அளவிற்கு மோசமான நிலையில் காணப்படுவதாகவும் கண்ணுக்கு தெரிகின்ற அளவில் பெரும்பான்மை காணப்பட்டபோதும் அதனை ஏற்றுக் கொள்வதற்கு எவரும் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.