163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கஜா புயலால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பாதிப்புகளும் ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கஜா புயல் தொடர்பில் எமது கிளிநொச்சி மாவட்டத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டமும் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளவும் தயாராக இருந்தனர். ஆனால் தெய்வாதீனமாக கஜா புயலால் கிளிநொச்சிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.
Spread the love