சபாநாயகர் கருஜெயசூரிய பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 2 நம்பிக்கையில்லா பிரேரணைகளும் பிழையான நடைமுறையை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்தநிலையில் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழலில் இடம்பெறக்கூடிய சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் முதலாவது தீர்மானம் ஜனாதிபதிக்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்தது எனவும் அரசியலமைப்பில் இதற்கு இடமில்லை என்பதும் சபாநாயகருக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இரண்டாவது தடவை அவர்கள் ஜனாதிபதியின் பிரகடனம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்த நிலையில் சபாநாயகர் தான் பிரதமரையோ அல்லது அமைச்சர்களையோ அங்கீகரிக்கவில்லை என குறிப்பிட்டதன் பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதியளித்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் குரல்மூல வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்த சபாநாயகர் அதனை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார் எனவும் இதன்மூலம் சபாநாயகர் பக்கசார்பாக செய்றபடுகின்றார் என்பது புலனாகின்றது எனவும் தெரிவித்த அவர் தற்போதைய சூழலில் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்துவதே சிறந்த விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.