பிரான்சில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பொதுமக்களை கைவிட்டுவிட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் இந்த போராட்டங்கள் குறித்து இதுவரை ஜனாதிபதி மக்ரோன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்களில் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஓரு வருடத்தில் பிரான்சில் 23 சதவீதம் அளவிற்கு டீசல் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.