இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்டு ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடைபெற்ற சாதிய வன்முறை தொடர்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் உள்ளிட்ட கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சல்லெஸ் முதலான ஐந்துபேரை மகாராஷ்டிரா மாநில காவல்துறை கைது செய்திருந்தது.
இதனையடுத்து எழுத்தாளர் வரவரராவை கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி முதல் ஹைதராபாத் அசோக்நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. தம் மீதான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்யுமாறுகோரி வரவரராவ் புனே நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த போதும் குறித்த மனுவை புனே நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்துள்ளது.
இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள வரவரராவ் வீட்டுக்கு நேற்று இரவு சென்ற காவல்துறையினர் வீட்டு காவலில் இருந்த வரவரராவை கைது செய்துள்ளனர்.பின்னர் காந்தி அரச வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றதுடன் நள்ளிரவு ஹைதராபாத்தில் இருந்து புனேயிற்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இன்றைய தினம் இன்று புனே செசன்ஸ் நீதிமன்றில் அவரை காவல்துறையினர் முன்னிலைப்படுத்தவுள்ளனர்