139
யாழ் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை பகுதியில் கஜா புயலில் சிக்கி வாழ்விடங்கள் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது . நேற்று(18) வழங்கப்பட்ட குறித்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பரஞ்ஜோதி பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்தார்.
குறித்த புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 770 குடும்பங்களை சேர்ந்த 2793 பேர் புயலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 வீடுகள் பூரணமாக சேதமடைந்துள்ளதுடன் 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
Spread the love