தற்போது பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உயிரிழப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நிலமைக்கு சபாநாயகரே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையை அல்லது பிரதமரை நியமிக்கவோ அரசாங்கத்தை கலைக்கவோ சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை எனவும் ஜனாதிபதிக்கே அதற்கான அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் என்பவர் பக்கச்சார்பற்றவராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் ஜனாதிபதியின் தீர்மானங்களை விமர்சிக்க சபாநாயகரால் முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.