ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் நேற்றிரவு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளதாகவும் இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பிலும் தமது கட்சியின் நிலைப்பாடு குறித்தும் ரணில் விக்கிரமசிங்க தூதுவர்களுக்கு விளக்கி கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளுடனான கூட்டத்தின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்pபடத்தக்கது