கெயிட்டியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெயிட்டிய ஜனாதிபதி ஜொவினெல் மோஸ் அந்நாட்டில் இடம்பெற்ற ஊழல் விசாரணையை முறையாக நடத்தத் தவறியுள்ளார் எனவும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுதிருந்தன.
இந்நிலையில் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் ஜொவினெல் மோஸ்ஸின் ஊழல் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரணி சென்றனர். இதன் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலியானதாகவும், 5 பேர் காயம் அடைந்ததாகவும் பலர் கைது செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முதலில் அமைதியாக இடம்பெற்ற பேரணியில் காவல்துறையினரை நோக்கி கற்கள் வீசப்பட்டதனைத் தொடர்ந்தே வன்முறை வெடித்தது என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது