பிரதமரின் செயலாளரிற்கு அரசாங்க பணத்தை பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்து பிரேரணை ஒன்று பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் இன்று (19) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையை இன்று ஒப்படைப்பதாக கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது பாராளமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று கையளிக்கப்பட்ட பிரேரணை, நவம்பர் மாதம் 29 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர்களான நவின் திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க, ஹெக்டர் அப்புஹாமி, சதுர சேனாரத்ன ஆகியோர் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைத்தனர்.