203
குவாத்தமாலாவில் உள்ள பாய்கோ எரிமலை பகுதியில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினையடுத்து அப்பகுதியில் உள்ள 4000 மக்கள் வெளியேற்றப்;பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த எரிமலை சீற்றத்தால் அந்த பகுதி சாம்பலாலும் புகையினாலும் சூழ்ந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே பகுதியில் கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினால் 194 பேர் கொல்லப்பட்டதுடன் குறைந்தபட்சம் 234 பேர் காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love