Home பிரதான செய்திகள் இங்கிலாந்து பயணத்தில் செய்த மோசமான தவறுகளை அவுஸ்திரேலிய பயணத்தில் தவிர்ப்போம்

இங்கிலாந்து பயணத்தில் செய்த மோசமான தவறுகளை அவுஸ்திரேலிய பயணத்தில் தவிர்ப்போம்

by admin


இங்கிலாந்து பயணத்தில் தாங்கள் செய்த மோசமான தவறுகளை அவுஸ்திரேலியப் பயணத்தில் ஏற்படாமல் தவிர்ப்போம் என இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இருபதுக்கு 20, டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடரில் விளையாட உள்ள நிலையில் இன்று முதலாவது இருபதுக்கு 20 போட்டி நடைபெற உள்ளது.

இந்தநிலையில் செய்தியாளர்களுக்கு கோலி வழங்கிய பேட்டியில் ஒவ்வொரு பந்திலும் வெற்றி பெற வேண்டும் எனவும் இங்கிலாந்து பயணத்தில் செய்த மோசமான தவறுகளை அவுஸ்திரேலிய பயணத்தில் நிச்சயம் நிகழாமல் தவிர்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட்டின் தரம் மிகவும் உயர்வாக இருந்த போதும் எங்களின் தவறுகள் மோசமாக இருந்ததால், தொடரை இழந்தோம்.

எனினும் அவுஸ்திரேலியத் தொடரில் எங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, எங்களின் குறைபாடுகளைக் களைந்து வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More