பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு போதுமான அளவுக்கு அக்கறை காட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டுக்கான 166கோடி டொலர் ராணுவ நிதியுதவியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு தங்களுக்கு உதவுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்த போதும் பாகிஸ்தான் எந்தவிதத்திலும் உதவவில்லை. அப்படி இருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியாக 166கோடி டொலர்களை அடுத்த ஆண்டுக்கு வழங்க முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு அபோட்டாபாத்தில்தான் ஒசாமா பின்லேடன் வாழ்ந்து வந்தார் என்று தெரியும். ஆனால், அவர்கள் அமெரிக்கப் படையினருக்கு ஒருபோதும் தகவல் அளிக்கவில்லை. ஆனால், எங்களிடம் இருந்து கோடிக்கணக்கான உதவிகளை மட்டும் பெற்றுக்கொண்டனர் எனவும் எனவே தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தாக பாகிஸ்தானுக்கு இனிமேல் உதவப் போவதில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.