குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சமூக பொருளாதர மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் ‘எமது எதிர்காலம் எமது கையில்’ எனும் தொனிப்பொருளில் உலக மீனவர் தினம் இன்று புதன் கிழமை (21) பூநகரியில் கொண்டாடப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை வாழ்வாதரமாக கொண்ட குடும்பங்களை மையப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதார வளர்ச்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்பபடுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த நிகழ்வானது இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச சபைக்கு உற்பட்ட தனியார் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் கடலினை அடிப்படையாக கொண்ட தொழில்களில் ஈடுபடும் குறிப்பாக அட்டைபிடித்தல், இறால் , நண்டு , கரவலை வீச்சு வலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு குழுக்களாக சிறப்பாக இயங்கி வரும் ஆண் மற்றும் பெண்களும் மீனவர் குழுக்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண நீரியல் வளதுறை உதவி இயக்குனர் நிருபராஜ்,யாழ் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் திருமதி.சுரேஸ் புளோரிடா மற்றும் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் , பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் , கிரம அலுவலகர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.