இலங்கை பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்திம் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்ற அவர், அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினர்.
அவர்களது நாட்டு பாராளுமன்றில் இடம்பெறும் இதுபோன்ற வன்முறைகள் குறித்து வாய்திறக்காத தூதுவர்கள், இலங்கை விடயம் என்றவுடன் முண்டியடித்து கருத்து வெளியிடுவதாக குற்றம் கமத்தியுள்ள அவர் உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இடம்பெறுகின்ற பிரச்சினை இலங்கையில் ஏற்படும்போது மாத்திரம் சில மேற்கத்தேய நாடுகளுக்கு வலிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்
பாராளுமன்றத்திலிருந்தாலும், வெளியில் இருந்தாலும் நாம் எல்லோரும் மனிதர்கள்.அவ்வப்போது சில அசம்பாவிதங்களும் ஏற்படும்.என்றபோதிலும் 225 உறுப்பினர்களும் எந்தவொரு சம்பவத்தையும் அனுமதிப்பதில்லை. எனினும் பாராளுமன்றில் சபாநாயகரின் பிழையான செயற்பாடுகளினால், சில அரசியல் தீர்மானங்களை எடுக்கும் போது, தமது ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப் பங்களும் உண்டாகும் என அவர் தெரிவித்துள்ளார்