பிரிஸ்பேனில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் அஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. மழை காரமணமாக போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலியா நிர்யணிக்கப்பட்ட 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து டக்வேர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 174 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் அவுஸ்திரேலியா நான்கு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி மெல்போர்னில் 23ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது