Home உலகம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ட்ரம்புக்கு கண்டனம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ட்ரம்புக்கு கண்டனம்

by admin


அமெரிக்காவின் தென்பகுதி வழியாக அகதிகளாக நுழைவோர் அந்நாட்டில் புகலிடம் கோருவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை விலக்குமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜோன் ரொபேர்ட்  , சன்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்ற நீதிபதியை விமர்சித்தமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

தனக்கு எதிராக தீர்ப்பளித்ததற்காக சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிபதியை ‘ஒபாமா நீதிபதி’ என டிரம்ப் விமர்சித்திருந்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார் .

இங்கு ஒபாமா நீதிபதிகள் அல்லது டிரம்ப் நீதிபதிகள், புஷ் நீதிபதிகள் அல்லது க்ளின்டன் நீதிபதிகள் என்றெல்லாம் கிடையாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நம்மிடம் இருப்பது மிகச்சிறந்த மற்றும் திறமை வாய்ந்த நீதிபதிகள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திரமான நீதித்துறை பெற்றதற்கு நாம் அனைவரும் நன்றியுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More