அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பழங்குடியினர்களால் அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்தவாரம் அந்தமான் தீவை சுற்றிப் பார்க்க சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான 27 வயதான ஜோன் அலென் சாவ் என்பவர் அந்தமானில் வசிக்கும் பழங்குடியின மக்களை பார்வையிடுவதற்காக அங்குள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு உள்ளூர் மீனவர்கள் மூலம் படகில் சென்றுள்ளார்.
வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் சென்டினல் பழங்குடியின மக்கள் வெளியுலகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள். அந்நியர்கள் சென்றால் அவர்களை பழங்குடியினர் தாக்குவார்கள் என்பதனால் அந்த பகுதிக்கு செல்ல அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், தடையை மீறி ரகசியமாக வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்ற அமெரிக்கரை பழங்குடியின மக்கள் கொன்றுள்ளனர்.இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் குறித்த அமெரிக்கரை பழங்குடியின மக்கள் வசிக்கும் தீவுக்கு செல்ல உதவியதாக மீனவர்கள் 7 பேரை கைது செய்து விசாரித்துள்ளனர்
சென்டினல் தீவில் பழங்குடியினரிடம் இருந்து அம்புகள் தாக்கியதாகவும் தாங்கள் பயந்து தப்பி வந்துவிட்டதாகவும் ஜஅமெரிக்கரை பழங்குடியினர் இழுத்துச் சென்றனர் எனவும் மறுநாள் சென்றபோது அவரது உடலை பார்த்ததாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகரிகத்திலிருந்து அப்பாற்பட்டு வாழும் செனிடல் தீவு பழங்குடியினர் 50ல் இருந்து 150 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட தெரியாது என்டபது குறிப்பிடத்தக்கது.