147
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்றையதினம் கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து விளக்கமளித்திருந்தனர். இந்தநிலையில் மகிந்தவும் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் அரசியல் குழப்பநிலை குறித்து தூதுவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love