169
இலங்கையில் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிகாரத்தின் ஊடாக நாட்டு மக்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகின்றார் எனும் குற்றச்சாட்டினையும் அவர் முன்வைத்துள்ளார். நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசியல் குழப்பநிலை உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்திலும் பல்வேறு எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே சமந்தா பவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love