148
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 7 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 5 உறுப்பினர்களும் வழங்கப்பட வேண்டும் என்பதை சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டட தொகுதியில், நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயத்தை முன்வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதனை ஐ.ம.சு.முன்னணி ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாக்கெடுப்புக்கு செல்லவேண்டுமெனவும், எந்தவகையிலான வாக்கெடுப்பிற்கும் தாம் தயாராகவே உள்ளதாகவும், மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love