சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்வதற்காக 2 நாட்கள் ஒதுக்கத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததனையடுத் 4 பெண்கள் தாங்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய காவல்துறைப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை நேற்றையதினம் விசாரித்த நீதிமன்றம் விசாரித்த போது கேரள அரசு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்த போதும் சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, சபரிமலை நடை திறக்கப்பட்ட நாள்களில், சில இளம் பெண்கள் அங்குச் செல்ல முயன்றபோது, பக்தர்கள், இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது