157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்து குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று(24) முற்பகல் 11.30 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
Spread the love