பிரதமராக பதவி ஏற்றதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசியல் ரீதியில் பாரிய தவறு இழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை பொறுப்பேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசியல் ரீதியில் பாரிய தவறு இழைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஸ, சற்று பொறுத்திருந்தால் நாட்டு மக்களே ஜனநாயக ரீதியில் ஆட்சி அதிகாரத்தினை அவருக்கே மீண்டும் கையளித்திருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக செயற்பட்டவர்கள் இன்று தம்மைத் தாமே ஆளும் தரப்பினர் எனத் தெரிவித்துக் கொள்வதில் குறிப்பிட்டுக்கொள்ள எவ்வித தார்மீக உரிமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் சற்று விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.