பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறையினருடன் மோதிய போராட்டக்காரர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரிகளை தாக்கியவர்களை நினைத்து தான் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் பிரெஞ்சு குடியரசில் வன்முறைக்கு இடமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பாய்ச்சியும் காவல்துறையினர் கலைக்க முயன்றதால் போராட்டம் நடைபெற்ற இடம் போர்க்களம் போல் காட்சியளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.சனிக்கிழமை பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கு கொண்டதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.