குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பேராதனைப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட தமிழ் மாணவர்களால் இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மடுக்கரை கிராமத்தில் நடாத்தப்பட்டது.
மடுக்கரை ம.வி பாடசாலையில் காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த மருத்துவ முகாமில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்று பிரதான வைத்தியர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் தாதியர்களும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டிருந்தனர். அiனைத்து நோய்களுக்கும் ஆலோசனைகளும் மருந்துகளும் வழங்கப்பட்டதுடன் விசேடமாக கண் பரிசோதனைகளும் பற்சிகிச்சைகளும் நடை பெற்றது.
ஒவ்வொரு வருடமும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு பல்வேறு பட்ட சேவைகளை செய்து வரும் நிலையில்,குறித்த மருத்துவ முகாமை மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை கிராமத்தில் ஏற்பாடு செய்ததாக பேராதனைப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட தமிழ் மாணவர் மாணவர்கள் தெரிவித்தனர்.
குறித்த மருத்துவ முகாமிற்கான நிதி பங்களிப்பினை வொல்ட் விஸன் நிறுவனம் வழங்கியுள்ளது.
மருத்துவ பரிசோதனை உபகரணங்களை கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி மையத்திலிருந்து நடமாடும் பல் சிகிச்iசை உபகரணங்கள் மற்றும் மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயத்திலிருந்து பிசியோ தெரபி மற்றும் மன்னார் விஸன் கெயார் நிறுவனத்திடமிருந்து கண் பரிசோதனை உபகரணமும் பெற்று குறித்த மருத்துவ முகாமை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த மருத்துவமுகாமில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
1 comment
மேற்குறித்த இலவச மருத்துவ முகாம் பேராதனைப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட தமிழ் மாணவர்களால் நடாத்தப்பட்டவொன்றாகும். மேற்குறித்த பதிவினால் நாம் சில சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடலாம் என்பதால் தங்களால் இயன்றால் தங்களின் மேற்குறித்த பதிவை திருத்தம் செய்ய வேண்டிநிற்கிறோம்.
– நன்றி –