169
சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான 2,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்திலேயே இவ்வாறு தொற்றுநோய் தாக்குதலுக்குள்ளாகி இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாரத்தில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 282 பேர் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியயுள்ளதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வைரஸ், ஹெப்படிட்டிஸ், காசநோய், சிபிலிஸ் மற்றும் கொனேரியா எனப்படும் பால்வினை நோய்த்தொற்றுக்களினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love