173
ஈரான் – ஈராக் எல்லையில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்ரர் அளவில் 6.3 அளவாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரானின், ஈராக் எல்லையை அண்மித்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
மேலும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் மீட்புக்குழுவினர் இராணுவத்தினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love