132
காவல்துறைத்தரப்புடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரையும் இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக காவல் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love