கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான முக்கியமான சாட்சியான கடற்படை அதிகாரி லக்சிறி கலகமகே என்பவர் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன முன்னிலையில் கடற்படையை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கடற்படை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கும் முப்படைகளின் பிரதானியின் உதவியாளர்கள் முயன்றுள்ளனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டள்ளது
கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படை தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் உணவருந்தும் பகுதியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட கடற்படை அதிகாரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தததனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் முக்கிய சாட்சியென சந்தேகிக்கப்படும் நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு உதவினார் என முப்படைகளின் பிரதானி மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றம்சாட்டியுள்ளதும் நீதிமன்றம் அவரை கைதுசெய்யலாம் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.