168
தி.குகீந்த் இயக்கத்திலும் துவாரகன் மற்றும் தி.கர்சனின் இணைந்த தயாரிப்பிலும் உருவான விதைகள் குறும்படம் வெளியானது . இந்தக்குறும்படம் இன்றைய இளைஞர்களின் சமுக மாற்றத்தின் மீதான பார்வையையும் அதற்காக அவர்கள் தெரிவுசெய்யும் வழிமுறைகளையும் கதைக்கருவாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இத்திரைக்கதைக்கு ச.பிரவீன் அவர்களின் உணர்ச்சிபூர்வமான வசனங்கள் இளைஞர்களின் மாற்றத்துக்கான எழுச்சியைத் தூண்டுவதாக அமைந்து திரைக்கதையின் நகர்வுக்கு வலுவைச் சேர்த்துள்ளது.
இந்தக் குறும்படத்திற்கான ஒளிப்பதிவினை லக்ஷன் மற்றும் ஜனுசன் ஆகியோரும் படத்தொகுப்பினை சனோஜன் அவர்களும் திறம்படச்செய்து மேலும் பலம் சேர்த்துள்ளனர்.
இவ்வாறான சமுகத்தில் மாற்றத்தை விதைக்கும் விதைகளை ஆதரவு செய்து நாளை நல்ல பல விருட்சங்களை உருவாக்க வேண்டும் என்பதே இயக்குநரின் வேண்டுகோளாகும்.
Spread the love