குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (27) தொடக்கம் பொது மக்களின் பார்வைக்காக மன்னார் நகர சபையில் வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
குறித்த வரவு செலவு திட்டத்தினை அலுவலக நேரத்தில் காலை 9 மணி தொடக்கம், மாலை 4 மணிவரை பொது மக்கள் பார்வையிடலாம்.
மேலும் 2019 ஆம் ஆண்டுக்கதன வரவு செலவுத்திட்டத்தில் மொத்த வருமானமாக 149 மில்லியன் 6 இலட்சத்து 28 ஆயிரத்து 550 ரூபாவும், மொத்தச் செலவீனமாக 149 மில்லியன் 6 இலட்சத்து 26 ஆயிரத்து 585 ரூபாவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மீண்டு வரும் செலவீனத்தில் நிர்வாக செலவீனங்களுக்காக 35,464 514.20 ரூபாவும்,சுகாதார சேவைகளுக்காக 35,543,266.60 ரூபாவும்,பௌதீக திட்டமிடலுக்காக 17,522,950 ரூபாவும்,தண்ணீர் சேவைகளுக்காக 6,546,400.00 ரூபாவும்,பொது பயன்பாட்டு சேவைகளுக்காக 2,129,260.00 ரூபாவும்,நலன் புரி சேவைகளுக்காக 5,120,195 ரூபாவும்,ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதே வேளை சபையின் அபிவிருத்தி வேளைகளுக்காக 43,100,000 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.