தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் சுராஜ் காரியவசத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின்ல் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
பிரதீப் சுராஜ் காரியவசம் தேதேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த போது சட்டத்துக்கு முரணாக பங்குகளைக் கொள்வனவு செய்ததாக லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் 9 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதீப் சுராஜ் காரியவசம் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது