ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரிலேயே புதிய அரசாங்கத்தில் தான் இணைந்து கொண்டதாகவும் அங்கு ஜனநாயகம் இல்லாத காரணத்தினாலேயே அங்கிருந்து வெளியேறியதாகவும் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தில் சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து பின்னர் அப் பதவியிலுந்து விலகியுள்ள நிலையில் வசந்த சேனநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்
மேலும் மக்களுக்கு எதையேனும் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே தான் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் எனினும் அங்கு ஜனநாயகம் இல்லாததனால் அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சிதாவல் மேற்கொண்டமைக்காக இரு பிரதான கட்சிகளிடமும் மன்னிப்பு கோருவதாக தெரிவித்த அவர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை பார்த்து மிகவும் மனம் வருந்தியதாகவும் இனி ஐக்கிய தேசியக் கட்சியுடனே இணைந்து பயணிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
1 comment
இவர் போன்ற பச்சோந்திகள், அரசியலரங்கிலிருந்தே விலக்கப்பட வேண்டியவர்களாவர். இவர் போன்றோர் சிலர் சிறுபான்மையினரான எம்மிடையேயும் காணப்படுகின்றார்கள். பதவிகளுக்காகப் பல்லிளிக்கும் இவர்களைக் கொன்றாலும் பாவமில்லை.
வாக்காள பெருமக்களே சிந்தியுங்கள்!