அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்தில் 6 மாத பயணத்திற்குப் பின்னர் இன்சைட் விண்கலத்தினை செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. தி இன்சைட் எனப்படும் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
பூமியை தவிர செவ்வாயில் மட்டும்தான் இது போன்ற ஆராய்ச்சி இடம்பெற்று வருகின்றது. திங்கட்கிழமை இந்த விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிக்கு அருகே உள்ள அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரையிறங்கிய நிலையில் தரையிறங்கிய சில நிமிடங்களில் நிலப்பரப்பின் முதல் புகைப்படம் வெளிவந்துள்ளது. ஏதிர்வரும் வரும் நாட்களில் இந்த நிலப்பரப்பின் தெளிவான படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப நிலை அதன் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்வதுடன தண்ணீர் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆராயும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.