இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகிய முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கி அவர் வெளிநாடு செல்ல உதவி வழங்கியமை தொடர்பில் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
11 இளைஞர்கள் கடத்தல் – முப்படைகளின் பிரதானி நீதிமன்றில் முன்னிலை
Nov 28, 2018 @ 03:37
முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன இன்றையதினம் நீதிமன்றில் முன்னலையாகியுள்ளார். நேற்றையதினம் குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தனக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள முன்னிலையாகவில்லை.
எனினும் தான் நீதிமன்றில் முன்னலையாகத் தயார் எனத் தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் முன்னலையாகியுள்ளார்.
கடந்த 2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கி அவர் வெளிநாடு செல்ல உதவி வழங்கியமை தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது