16 நாடுகள் பங்கேற்கும் 14வது உலக கிண்ண ஹொக்கி போட்டி ஒடிசா மாநலத்தின் புவனேஸ்வரத்தில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் போட்டியிடவுள்ளன.
உலக கிண்ண ஹொக்கி போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் இடம்பெற்ற ஆரம்ப போட்டியில் பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் உலக கிண்ண ஹொக்கி போட்டி கடைசியாக 2014-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்றதில் அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தது.
அந்தவகையில் இன்று ஆரம்பமாகவுள்ள 14-வது உலக கிண்ண ஹொக்கி போட்டி டிசம்பர் 16ம் திகதிவரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.